இந்தியா (National)

கோப்புப்படம் 

ஆன்லைனில் நடந்து முடிந்த கல்யாணம்.. பாக். பெண்ணை மணந்த பா.ஜ.க. தலைவர் மகன்

Published On 2024-10-20 02:41 GMT   |   Update On 2024-10-20 02:41 GMT
  • இரு நாடுகள் இடையே பிரச்சினைகள் நிலவுவதால், விசா கிடைக்காமல் போனது.
  • திருமணத்தை விரைந்து ஆன்லைனில் நடத்தி முடிக்க இருவீட்டார் முடிவு எடுத்தனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் இந்திய மணமகன், பாகிஸ்தான் மணமகளுக்கு ஆன்லைன் வழியே எல்லை தாண்டிய திருமணம் நடந்தது. இந்த வித்தியாச திருமணம் பா.ஜ.க.-வை சேர்ந்த உள்ளூர் தலைவர் தஹ்சீன் ஷாஹித் குடும்பத்தில் தான் வெற்றிகரமாக அரங்கேறி இருக்கிறது.

தஹ்சீன் ஷாஹித் மகன் முகமது அப்பாஸ் ஹைதர் மற்றும் பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்த ஆன்ட்லீப் சஹ்ராவுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதையொட்டி, மணமகன் பாகிஸ்தான் செல்ல விசா கோரி விண்ணப்பித்து இருந்தார். எனினும், இரு நாடுகள் இடையே அரசியல் பிரச்சினைகள் நிலவுவதால், விசா கிடைக்காமல் போனது.

இதைத் தொடர்ந்து மணப்பெண் தாயார் ராணா யாஸ்மின் ஜைதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே தாயார் உடல்நிலையை கருத்தில் கொண்டு திருமணத்தை விரைந்து முடிக்க ஆன்லைனில் நடத்துவதே சிறந்த வழியாக இருக்கும் என்று இருவீட்டார் இணைந்து முடிவு எடுத்தனர்.

அதன்படி கடந்த வெள்ளிக் கிழமை இரவு, ஷாஹித் இமாம்பராவில் கூடி ஆன்லைன் திருமணத்தில் பங்கேற்றார். லாகூரைச் சேர்ந்த மணமகளின் குடும்பத்தினர் விழாவில் பங்கேற்றனர்.

ஆன்லைன் திருணம் பற்றி பேசிய ஷியா மதத் தலைவர் மௌலானா மஹ்ஃபூசுல் ஹசன் கான், "இஸ்லாத்தில், திருமணம் செய்ய பெண்ணின் சம்மதம் இன்றியமையாதது. மேலும் மணப்பெண் தன் சம்மதத்தை மௌலானாவிடம் தெரிவிக்க வேண்டும். இரு தரப்பு மௌலானாக்கள் இணைந்து விழாவை நடத்தும் போது ஆன்லைன் திருமணம் சாத்தியமான் ஒன்று தான்," என்றார்.

மேலும் மணமகன் ஹைதர் தனது மனைவிக்கு இந்திய விசாவை எந்த தொந்தரவும் இல்லாமல் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

Similar News