இந்தியா

குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்

Published On 2024-04-03 10:06 GMT   |   Update On 2024-04-03 10:12 GMT
  • பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் விஜேந்தர் சிங் பாஜகவில் இணைந்தார்.
  • 2019 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட விஜேந்தர் சிங் தோல்வி அடைந்தார்

2008 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் அவர் பாஜக கட்சியில் இணைந்தார்.

2019 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். தற்போது தேர்தலில் காங்கிரசில் சீட் மறுக்கப்பட்டதால், அவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. 

Tags:    

Similar News