இந்தியா

இனிப்பு பரிமாறிக் கொண்ட வீரர்கள்

குடியரசுதின கொண்டாட்டம் - வாகா எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் இனிப்பு பரிமாற்றம்

Published On 2023-01-26 19:38 GMT   |   Update On 2023-01-26 19:38 GMT
  • அட்டாரி வாகா எல்லை இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.
  • இங்கு இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனர்.

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படைவீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.

இந்நிலையில், 74-வது குடியரசு தினத்தையொட்டி சர்வதேச எல்லையையொட்டி பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய ராணுவத்தினர் இனிப்பு பரிமாறிக்கொண்டனர்.

பஞ்சாப் மாநில எல்லையான வாகாவிலும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் இனிப்புகளை பரிமாறி கொண்டனர். அப்போது ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் பகிர்ந்தனர்.

Tags:    

Similar News