இந்தியா
பிரதமர் மோடியுடன் ராஜாஜியின் கொள்ளு பேரன் சந்திப்பு
- ராஜாஜியின் கொள்ளு பேரன் கேசவன் அக்கட்சியில் இருந்து பிப்ரவரி 23-ம் தேதி விலகினார்.
- கேசவன் தலைநகர் டெல்லியில் கடந்த 8-ம் தேதி பா.ஜ.க.வில் இணைந்தார்.
புதுடெல்லி:
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சி. ராஜகோபாலச்சாரி. இவரது கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன்.
காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த அவர், அக்கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி 23-ம் தேதி விலகினார். இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அவர் கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பினார்.
இதற்கிடையே, காங்கிரசில் இருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளு பேரன் கேசவன் கடந்த 8-ம் தேதி பா.ஜ.க.வில் இணைந்தார்.
இந்நிலையில், பாஜகவில் இணைந்த ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்தார்.