தோசையுடன் வழங்கிய சாம்பாரில் 'எலி' - வைரல் வீடியோ
- ஓட்டலுக்குள் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஓட்டல் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
- பயனர்கள் பலரும் தங்கள் பகுதிகளிலும் ஓட்டல்களில் இதுபோன்று சுகாதாரமற்ற உணவுகள் வினியோகம் செய்யப்பட்டது குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் அபினாஸ்-தேவி தம்பதியினர் அப்பகுதியில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது அந்த தம்பதி தங்களுக்கு தோசை ஆர்டர் செய்துள்ளனர். அதன்படி ஊழியர் ஒருவர் தோசை கொண்டுவந்து கொடுத்துள்ளார்.
தோசையுடன் வழங்கப்பட்ட சாம்பாரில் ஒரு இறந்த எலி கிடந்துள்ளது. இதைப்பார்த்து அந்த தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக உணவக ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த தம்பதியினர் மாநகராட்சி அதிகாரிகளிடமும், சுகாதாரத்துறையிடமும் புகார் அளித்தனர்.
அதன் பேரில் ஓட்டலுக்குள் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஓட்டல் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர். மேலும் அந்த உணவகத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்கள் பகுதிகளிலும் ஓட்டல்களில் இதுபோன்று சுகாதாரமற்ற உணவுகள் வினியோகம் செய்யப்பட்டது குறித்து பதிவிட்டு வருகின்றனர்.