இந்தியா

டெல்லியை புரட்டிப்போட்ட புழுதிப்புயல்

Published On 2024-05-11 02:46 GMT   |   Update On 2024-05-11 02:46 GMT
  • மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாக போலீசாருக்கு அழைப்புகள் வந்துள்ளன.
  • பல வீடுகளும் சேதம் அடைந்துள்ளதாக அழைப்புகள் வந்துள்ளன.

இந்தியா முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. 100 டிகிரி ஃபாரன்ஹிட்டை தாண்டி வெயில் கொளுத்துகிறது. வெப்ப அலை காரணமாக பகல் நேரத்தில் மக்கள் வெளியே தலைக்காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களாக ஒரு சில இடங்களில் மழையும், சில இடங்களில் கன மழை பெய்தும் குளிர்வித்தது.

தற்போது வானிலை சற்று மாற்றம் அடைந்து வருகிறது. இந்த நிலையில்தான் டெல்லி மற்றம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று புழுதிப் புயல் வீசியது. இந்த புழுதிப் புயல் காரணமாக டெல்லி மாநிலத்தன் பெரும்பாலான பகுதி பாதிப்புக்குள்ளானது.

இந்த நிலையில் மரங்கள் வேரோடு சாய்ந்தாக 152 அழைப்புகள் வந்துள்ளது. கட்டடங்கள் சேதமடைந்ததாக 55 அழைப்புகள் வந்துள்ளது. மின்சாரம் துண்டிப்பு தொடர்பாக 202 அழைப்புகள் வந்துள்ளது என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News