இந்தியா

3-வது முறை ED-யின் சம்மனை புறக்கணித்த கெஜ்ரிவால்: பா.ஜனதா விமர்சனம்

Published On 2024-01-03 04:38 GMT   |   Update On 2024-01-03 04:38 GMT
  • டெல்லி அரசின் மதுபான கொள்கை மோசடி புகார் தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு சம்மன்.
  • இன்று 3-வது முறையாக அமலாக்கத்துறையின் சம்மனை கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார்.

டெல்லி அரசின் மதுபான கொள்கை மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து துணை முதல்வர் உள்ளிட்ட மந்திரிகளிடம் விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் ஜாமின் கிடைக்காததால் டெல்லியின் முக்கிய மந்திரிகள் சிறையில் உள்ளனர்.

இந்த மோசடி தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது.

இரண்டு முறை சம்மன் அனுப்பியபோது, இரண்டு முறையும் அவர் புறக்கணித்திருந்தார். இன்று ஆஜராகும்படி 3-வது முறையாக சம்மன் அனுப்பியிருந்தது. 3-வது முறையும் இன்று ஆஜராகாமல் புறக்கணித்துள்ளார்.

இந்த நிலையில் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூணவல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இன்று மேலும் ஒருமுறை அமலாக்கத்துறையின் 3-வது சம்மனை அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார். அங்கே ஏதோ மறைக்கப்படுகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. இல்லையெனில் குற்றவாளி போன்று அவர் ஏன் மறைய வேண்டும். நீதிமன்றங்கள் மணிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஜாமின் வழங்கவில்லை.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News