இந்தியா

தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல் மந்திரி பதவி விலக முடிவு: பட்னாவிஸ்

Published On 2024-06-05 09:46 GMT   |   Update On 2024-06-05 10:22 GMT
  • மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. குறைந்த இடங்களில் வென்றதற்கு நான் பொறுப்பேற்கிறேன்.
  • புதிய வியூகம் தயாரித்து மக்கள் மத்தியில் செல்வோம் என்றார் பட்னாவிஸ்.

மும்பை:

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களில் வென்றுள்ளது. எனவே மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி கூட்டணி ஆட்சியாக அமைய வாய்ப்புள்ளது.

தேர்தலில் உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் பாஜக கணிசமான இடங்களை இழந்துள்ளது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. குறைந்த இடங்களில் வென்றதற்கு நான் பொறுப்பேற்கிறேன். நான் கட்சிக்கு தலைமை தாங்கினேன். வரும் தேர்தலில் கட்சிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பதற்காக என்னை அரசு பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு பா.ஜ.க. மேலிடத்தை கேட்டுக் கொள்கிறேன்.

மகாராஷ்டிராவில் நடந்த இந்த தோல்வியால் எங்கள் இடங்கள் குறைந்துவிட்டன. இதற்கு முழு பொறுப்பும் என்னுடையது. இந்தப் பொறுப்பை ஏற்று குறை எதுவோ அதை நிறைவேற்ற முயற்சிப்பேன். நான் ஓடிப்போகும் ஆள் இல்லை. புதிய வியூகம் தயாரிப்போம், புதிய வியூகம் தயாரித்து மக்கள் மத்தியில் செல்வோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News