இந்தியா

முழு நாடும் வினேஷ் போகத் உடன் நிற்கிறது - ராகுல்காந்தி

Published On 2024-08-07 10:58 GMT   |   Update On 2024-08-07 10:58 GMT
  • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
  • வினேஷ் மனம் தளரக்கூடியவர் அல்ல, அவர் இன்னும் வலுவாக களம் திரும்புவார்.

ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை குஸ்மானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார்.

இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

இந்நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் அப்பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "உலக சாம்பியன்களான மல்யுத்த வீராங்கனைகளை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் பெருமைக்குரிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

இந்த முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து இந்தியாவின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

வினேஷ் மனம் தளரக்கூடியவர் அல்ல, அவர் இன்னும் வலுவாக களம் திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

நீங்கள் எப்போதும் நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள் வினேஷ். இன்றும் முழு நாடும் உங்களுடன் நிற்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கேவும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News