கைகோர்த்தபடி ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்த தந்தை - மகன்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி
- டிராகில் இறங்கி உள்ளுர் ரயில் வந்துகொண்டிருக்கும் மற்றொரு டிரக்கிற்கு மாறி கை கோர்த்தபடி இருவர் ரயிலின் முன்னே அப்படியே கீழே அமர்ந்துள்ளனர்.
- கைகோர்த்தபடி ரயில் முன் செல்வதும், அவர்கள்மீது ரயில் ஏறுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் தந்தையும் மகனும் கை கோர்த்தபடி ரெயிலின் முன் படுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாயாந்தர் ரெயில் நிலையத்தில் நேற்று முன் தினம் திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பிளாட்பாமில் நடந்து சென்று ரெயில்வே டிராகில் இறங்கி உள்ளுர் ரெயில் வந்துகொண்டிருக்கும் மற்றொரு டிரக்கிற்கு மாறி கை கோர்த்தபடி இருவர் ரெயிலின்முன்னே அப்படியே கீழே அமர்ந்துள்ளனர்.
மிகவும் அருகில் இருந்ததால் நிறுத்தமுடியாமல் அவர்கள் மீது REYILஎறியுள்ளது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் நலசோபாரா பகுதியைச் சேர்ந்த ஹர்ஷித் மேத்தா[60], ஜே மேத்தா[35] என்பதும் அவர்கள் தந்தை மற்றும் மகன் என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது. அவர்கள் பிளாட்பாமில் நடந்து சென்று, டிராக்கில் இறங்கி, கைகோர்த்தபடி ரெயில் முன் செல்வதும், அவர்கள்மீது ரெயில் ஏறுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மனதை உருக்கும் அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் தந்தை மகனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.