இந்தியா

காங்கிரஸ் தலைவரின் காலை சுத்தம் செய்த கட்சி தொண்டர்: பாஜக கடும் விமர்சனம்

Published On 2024-06-18 11:14 GMT   |   Update On 2024-06-18 11:14 GMT
  • மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் காலை தொண்டர் சுத்தம் செய்வது போன்ற வீடியோ வெளியானது.
  • தொண்டர் காலை சுத்தம் செய்யவில்லை. தண்ணீர் மட்டுமே ஊற்றினார் என நானோ படோலே விளக்கம்.

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலேயின் காலில் ஒட்டிய சேற்றை தொண்டர் ஒருவர் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

அந்த வீடியோவில் காங்கிரஸ் தலைவர் நானோ படோலே காரில் இருந்து கொண்டு காலை நீட்டுகிறார். காங்கிரஸ் கட்சி தொண்டர் தண்ணீர் கொண்டு வந்து காலில் இருந்து சேற்றை சுத்தம் செய்கிறார்.

இது தொடர்பாக பாஜக தலைவர் ஷேசாத் பூனவல்லா தனது டுவிட்டர் பக்கத்தில் "மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலேயின் காலை காங்கிரஸ் கட்சி தொண்டர் சுத்தம் செய்கிறார். இவர்கள் தங்களை ராஜா மற்றும் ராணியாக நினைத்துக் கொண்டு வாக்காளர்களையும், தொண்டர்களையும் அடிமைகள் போல் நடத்துகிறார்கள்.

அதிகாரத்தில் இல்லாதபோதே மக்களை இப்படி செய்கிறார்கள் என்றால் நினைத்து பாருங்கள். தவறுதலாக கூட அதிகாரத்திற்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார்கள். நானோ படோலே மற்றும் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நானோ படோலே கூறுகையில் "மழைக் காரணமாக தனது காலில் சேறு ஒட்டிக்கொண்டது. ஆகவே, நான் தண்ணீர் கேட்டேன். கட்சி தொண்டர் தண்ணீர் கொண்டு வந்தார். அவர் காலில் ஊற்ற நான் சுத்தம் செய்தேன்" என்றார்.

Tags:    

Similar News