இந்தியா

புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு: பாராளுமன்றத்தில் மசோதா அறிமுகம்?

Published On 2023-12-12 01:24 GMT   |   Update On 2023-12-12 01:24 GMT
  • பெண்களுக்கு 33 இட ஒதுக்கீடு மசோதா கடந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
  • மக்களை தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகு, தொகுதி வரையறை செய்யப்பட்டடு அமல்படுத்தப்படும்.

மக்களவை மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா பாராளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேறியது.

என்றாலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் தொகுதி வரையறை செய்யப்பட்ட பிறகே இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் 2029-க்கும் முன்னதாக இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லை.

இந்த நிலையில் யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரண்டு மாநில சட்டமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இரண்டு மசோதாக்களை பாராளுமன்றத்தில் இன்று மத்திய அரசு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி 30 தொகுதிளை கொண்ட சட்டமன்றமாகும். ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் மொத்தம் 114 தொகுதிகளை கொண்டதாகும். இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் 24 தொகுதிகளும் அடங்கும். ஜம்மு-காஷ்மீரில் தொகுதி வரையறை முடிந்த பின்னர் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News