இந்தியா (National)

பலமுறை ஆஃபர் வந்தது: பிரதமராகும் நோக்கம் எனக்கு இல்லை- நிதின் கட்கரி

Published On 2024-09-27 01:49 GMT   |   Update On 2024-09-27 01:49 GMT
  • மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவும், தேர்தலுக்கு பின்னருக்கும் பலமுறை இதுபோன்ற வாய்ப்பு (ஆஃபர்) தன்னைத்தேடி வந்தது.
  • நான் என்னுடைய சித்தாந்தத்துடன் சமரசம் செய்து கொள்ளமாட்டேன்.

பா.ஜ.க.-வின் மூத்த தலைவர்களில் ஒருவர் நிதின் கட்கரி. இவருக்கு பலமுறை பிரதமர் பதவி வாய்ப்பு (ஆஃபர்) வந்ததாக கூறப்படுகிறது.

மக்களவை தேர்தலில் பா.ஜ.க.-விற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் நிதின் கட்கரியை சந்தித்து, நீங்கள் பிரதமர் பதவியை ஏற்க தயாராக இருந்தால் ஆதரவு தர தயாராக இருக்கிறோம் என எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தங்களிடம் கூறியதாக செய்திகள் வெளியானது குறித்து விளக்கமாக கூற முடியுமா? என ஆங்கில செய்தி நிறுவனம் நடத்திய மாநாட்டில் (conclave) கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு நிதின் கட்கரி பதில் அளித்து கூறியதாவது:-

மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவும், தேர்தலுக்கு பின்னருக்கும் பலமுறை இதுபோன்ற வாய்ப்பு (ஆஃபர்) தன்னைத்தேடி வந்தது. நான் என்னுடைய சித்தாந்தத்துடன் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். அந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்வது தொடர்பான கேள்வியே அங்கு இல்லை. பிரதமராக வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. என்னுடைய நம்பிக்கையுடன் என்னுடைய சித்தாந்தத்துடன் வாழ்ந்து வருகிறேன்.

இவ்வாறு நிதின் கட்கரி பதில் அளித்தார்.

Similar News