இந்தியா

பாராளுமன்றத்திற்கு வெளியேயும் கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு: இருவர் கைது

Published On 2023-12-13 08:39 GMT   |   Update On 2023-12-13 09:10 GMT
  • இன்று மதியம் மக்களவையில் பார்வையாளர் இடத்தில் இருந்து இருவர் திடீரென எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் குதித்தனர்.
  • ஒருவர் சபாநாயகர் நோக்கி ஓடினார். மேலும், இருவரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் மக்களவையில் பார்வையாளர் இடத்தில் இருந்து இருவர் திடீரென எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் குதித்தனர். ஒருவர் சபாநாயகர் நோக்கி ஓடினார். மேலும், இருவரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார். இதனால் எம்.பி.க்கள் பதற்றம் அடைந்து ஓட ஆரம்பித்தனர்.

பின்னர் பாதுகாவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து அவர்களை மடக்கி பிடித்தனர்.

அதேவேளையில் பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இருவர் புகை குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளியேயும் பதற்றம் நிலவியது. அவர்களை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பலத்த பாதுகாப்பிற்குப் பிறகே மக்களவையில் பார்வயைாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அப்படி இருந்தும் கண்ணீர் புகை குண்டுகளை கொண்டு சென்றது அதிர்ச்சி அளிக்கிறது. இது மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags:    

Similar News