இந்தியா

(கோப்பு படம்) 

கோதுமை, பருப்பு வகைகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை அதிகரிப்பு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2022-10-18 12:47 GMT   |   Update On 2022-10-18 12:47 GMT
  • பருப்பு வகைக்கு குவிண்டாலுக்கு ரூ.500 ஆதரவு விலை உயர்வு.
  • குங்குமப்பூ குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.209 அதிகரிப்பு.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் 2023-24ம் ஆண்டுக்கான சந்தைப் பருவத்திற்கு அனைத்து ரபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலையை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பருப்பு வகைக்கு குவிண்டாலுக்கு ரூ.500-ம், கடுகுக்கு குவிண்டாலுக்கு ரூ.400-ம் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. குங்குமப்பூ குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.209 அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோதுமை, உளுந்து, கொள்ளு ஆகியவற்றுக்கு குவிண்டாலுக்கு ரூ.110-ம், பயறு வகைகளுக்கு ரூ.105 ம், பார்லிக்கு குவிண்டாலுக்கு ரூ.100-ம் குறைந்த பட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கான கூலி, எந்திரக் கருவிகள், நிலத்திற்கு வழங்கப்படும் குத்தகை, விதைகள், உரங்கள், பாசன கட்டணம், பம்ப் செட்டுக்கு பயன்படுத்தும் டீசல் அல்லது மின்சாரம் போன்ற அனைத்து செலவுகளையும் உள்ளடக்கி குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News