இந்தியா

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட் - லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-08-16 02:41 GMT   |   Update On 2024-08-16 05:21 GMT
  • எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று விண்ணில் பாய்கிறது.
  • பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள் 13 நிமிடத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட உள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ள பூமி கண்காணிப்பு செயற்கைகோள் இ.ஓ.எஸ்.08. இந்த செயற்கைகோளை சுமந்தப்படி எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு திட்டமிட்டபடி விண்ணில் பாய்கிறது.

பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள் 13 நிமிடத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட உள்ளது.

3 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்ததாகும். இதனை ராக்கெட்டில் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. இந்த ராக்கெட்டில் 175 கிலோ எடை கொண்ட 3 ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருவிகளும் ஒவ்வொரு பயன்பாடுகளுக்காக செயல்பட இருக்கிறது.

2024-08-16 05:18 GMT

இந்த ராக்கெட் வழக்கமான ராக்கெட்டை விட மிக எளிய டிசைன் கொண்டிருக்கிறது. இதன் நேவிகேஷன் முறை முற்றிலும் வித்தியாசமானது. ஒட்டுமொத்த ஆர்கிடெக்ச்சர் மற்றும் டிசைன் வித்தியாசமானது - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

2024-08-16 05:07 GMT

இது மிகவும் வெற்றிகரமான திட்டம். இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி 100 சதவீத வெற்றியோடு செயற்கைகோள் சரியாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

2024-08-16 04:07 GMT

அப்டேட் கொடுத்த இஸ்ரோ.. எக்ஸ் பதிவு கீீழே..


2024-08-16 04:05 GMT

எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட் இஓஎஸ் 08 செயற்கைக்கோளை வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியது. 

2024-08-16 04:02 GMT

விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் முதல் நிலையில் வெற்றிகரமாக பிரிந்தது

2024-08-16 03:51 GMT

விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட் - வீடியோ 



2024-08-16 03:48 GMT

வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட்

2024-08-16 03:40 GMT



2024-08-16 03:38 GMT

எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் காட்சியை நேரில் கண்டுகளிக்க பள்ளி மாணவர்கள், பொது மக்கள் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் கூடியுள்ளனர்.

2024-08-16 03:34 GMT

சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் சீறிப்பாய தயார் நிலையில் எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட்.

Tags:    

Similar News