கனவு நனவானது: பீகாரின் முதல் திருநங்கை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சொல்கிறார்
- சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை.
- பீகார் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் ஆவார்
மான்வி மது காஷ்யப் என்ற திருநங்கை பீகார் மாநிலத்தின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் ஆகியுள்ளார். சப்-இன்ஸ்பெக்டருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் கனவு நனவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
பீகாரின் பங்கா மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இவரை பல பயிற்சி மையங்கள் நிராகரித்த போதிலும், தனது விடாமுயற்சி காரணமாக தற்போது சப்-இன்ஸ்பெக்டராகியுள்ளார்.
இது தொடர்பாக மான்வி மது காஷ்யப் கூறுகையில் "எனக்கு இது கனவு நனவானது போல் உள்ளது. எனக்கு உதவியாக என்னுடைய இருந்த அனைவருக்கும் மிகவும் நன்றியுள்ளவனராக இருக்கிறேன்.
ஆனால் என்னுடைய பயணம் இங்கேயுடன் நின்று விடாது. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் பணி செய்தால் எதையும் அடைய முடியும் என்ற தகவலை எனது கிராம மக்களுக்கு தெரிவிக்க, போலீஸ் உடையுடன் சொந்த கிராமத்திற்கு செல்ல விரும்புகிறேன்.
எனது வெற்றிக்கான பாதை சவால்களால் நிறைந்தது என்று நான் சொல்ல வேண்டும். குறிப்பாக நான் ஒரு திருநங்கை என்ற அடையாளத்தின் காரணமாக. நான் பல தடைகளையும் பாகுபாடுகளையும் சந்தித்தேன். திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு நிறைய செய்ய வேண்டும்.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கு தயாராகுவதற்காக பாட்னாவில் பல பயிற்சி மையங்களுக்கு சென்றேன். ஆனால் நான் அங்கே இருப்பது சூழ்நிலையை சீர்குலைக்கும் எனச் சொன்னார்கள். இது என்னை மிகவும் பின்னடைவாக இருந்தது. ஆர்வலர் ரேஷ்மா பிரசாத், ஆசிரியர் ரஹ்மான் ஆகியோர்தான் நான் இந்த நிலைக்கு உயர முக்கிய காரணம்" என்றார்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பீகாரில் 40,827 திருநங்கைகள் உள்ளனர்.