இந்தியா (National)

அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே...பிரதமர் மோடிக்கு புகைப்படம் பரிசளித்த ஜமைக்கா பிரதமர்

Published On 2024-10-01 14:37 GMT   |   Update On 2024-10-01 14:37 GMT
  • ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் நேற்று இந்தியா வந்தார்.
  • அவர் பிரதமர் மோடியைச் சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதுடெல்லி:

ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் அரசுமுறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தார். இன்று அவர், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம், கலாசார பரிமாற்றம், விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு என இரு நாடுகளுக்கு இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜமைக்கா பிரதமர் புகைப்படம் ஒன்றை பரிசளித்தார். அதில், கடந்த 2000-ம் ஆண்டு மாண்டிகோ பேவில் பயணம் செய்து இந்திய வம்சாவளியினருடன் பேசியதை நினைவு கூரப்பட்டது.

அதற்கு பதிலாக பிரதமர் மோடி இந்திய கிரிக்கெட் அணியினர் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக அளித்தார். இரு பிரதமர்களும் சந்திப்பு நிகழ்ச்சியில் கிறிஸ் கெயில் மற்றும் நீரஜ் சோப்ரா ஆகியோரும் பங்கேற்றனர்.

ஜமைக்கா பிரதமர் ஒருவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News