இந்தியா

இது மறுப்பது பற்றியது அல்ல... பா.ஜனதாவில் இணைவது குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு கமல் நாத் பதில்

Published On 2024-02-17 12:10 GMT   |   Update On 2024-02-17 12:10 GMT
  • மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் தோல்வியால் ராகுல் காந்தி எதிர்ப்பு.
  • மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்காததால் கமல்நாத் அதிருப்தி எனத் தகவல்.

மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அம்மாநில காங்கிரஸ் தலைவரான முன்னாள் முதல்வர் கமல்நாத்துக்கு எதிராக ராகுல் காந்தி இருப்பதாலும், மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்காததாலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் கமல் நாத் இணைய இருப்பதாக வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இன்று டெல்லில் பா.ஜனதாவின் மூத்த தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து கமல் நாத்திடம் கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர், "நீங்கள் பா.ஜனதாவில் இணையப் போவதாக செய்திகள் வருகிறதே?" என்றார்.

அதற்கு கமல்நாத், "அதேபோல் ஒரு விசயம் இருந்தால், நான் உங்களுக்குத்தான் முதலில் தகவல் தெரிவிப்பேன்" என்றார்.

அதற்கு பத்திரிகையாளர், "நீங்கள் இணைவது தொடர்பாக மறுப்பு தெரிவித்ததுபோல் இல்லையே உங்கள் பதில்".. என்றார்.

அதற்கு கமல்நாத், "இது மறுப்பது பற்றியது அல்ல. நீங்கள் இதுகுறித்து பேசுகிறீர்கள். உங்களை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சிடையகிறார்கள். இந்த பக்கமா, அந்த பக்கமா என்பது குறித்து பேசுவதில் நான் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் அதுபோன்று ஏதாவது நடந்தால், உங்களுக்குத்தான் முதலில் தகவல் தெரிவிப்பேன் என்றார்.

கடந்த சில தினங்களாக கமல் நாத்தின் கோட்டையாக கருதப்படும் சிந்த்வாரா தொகுதியில் சுற்றுப் பயணம் செய்தார். இந்தத் தொகுதியில் இருந்து 9 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த முறை அவரது மகன் நகுல் நாத் வெற்றி பெற்றார். பா.ஜனதா 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையிலும் சிந்த்வாரா தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கை நிரூபித்தார்.

இந்த தொகுதியில் நான்தான் வேட்பாளர் என அவரது மகன் நகுல் நாத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News