இந்தியா

பெண் டாக்டர் கொலை: போராட்டம் குறித்த அறிக்கை வேண்டும், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Published On 2024-08-18 03:37 GMT   |   Update On 2024-08-18 03:37 GMT
  • கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • மருத்துவர்கள் நாடு முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருபத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்து, கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள், டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 


மருத்துவர்கள் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்கள் குறித்து அறிக்கை சமர்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மாநில அரசுகள் இது தொடர்பாக நடைபெறும் போராட்டங்கள் குறித்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News