இந்தியா

கற்பழிப்பு குற்றவாளிகளின் ஆண்மையை நீக்க வேண்டும்: ஐக்கிய ஜனதாதள கட்சி தலைவர் அதிரடி

Published On 2024-09-04 12:26 GMT   |   Update On 2024-09-04 12:26 GMT
  • பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து கடும் விவாதம் நடந்து வருகிறது.
  • பலாத்கார வழக்குகளில் ஒரு மாதத்துக்குள் விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும் என்றார்.

புதுடெல்லி:

ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து சமீபத்தில் விலகியவர் கே.சி.தியாகி. ஆனாலும் கட்சியில் நீடிப்பேன் என அவர் கடந்த வாரம் தெரிவித்தார்.

இதற்கிடையே, கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து நாட்டில் கடுமையான விவாதம் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கே.சி. தியாகி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பலாத்கார வழக்குகளில் ஒரு மாதத்துக்குள் விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும்.

குற்றவாளிகளின் ஆண்மை நீக்கப்பட வேண்டும். கற்பழிப்பாளர்களின் வீரியம் ஒழிக்கப்பட வேண்டும்.

பெண்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுவதை விட பெரிய கொடுமை வேறு எதுவும் இருக்கமுடியாது.

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு இதுபோன்ற தீவிரமான தண்டனை, அவர் தனது கடைசி மூச்சு வரை தனது குற்றத்திற்காக அவதிப்படுவதை உறுதி செய்யும். மேலும், இதுபோன்ற குற்றத்தை யாரும் செய்யத் துணிய மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News