இந்தியா

விவசாயிகள் பேரணி எதிரொலி: டெல்லி முழுவதும் ஒரு மாதத்திற்கு தடை உத்தரவு

Published On 2024-02-12 07:24 GMT   |   Update On 2024-02-12 07:58 GMT
  • டெல்லிக்குள் டிராக்டர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
  • விதியை மீறும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என டெல்லி போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை.

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாய விலையை உறுதியை செய்வதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நாளை பேரணி நடத்த இருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்தன. 200 விவசாய சங்கங்கள் பேரணியில் கலந்த கொள்ள அழைப்பு விடுத்த நிலையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் கூட வாய்ப்புள்ளது.

இதனால் டெல்லி மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு தடுப்புகள் கொண்டு எல்லைகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

நாளை பேரணி நடைபெறும் நிலையில், இன்றே எல்லை பகுதிகளுக்கு விவசாயிகள் வரத்தொடங்கியுள்ளனர். இதனால் டெல்லி அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடுத்த மாதம் 12-ந்தேதி வரை பொது இடங்களில் அதிகமானோர் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டெல்லி நகருக்குள் துப்பாக்கிகள், எரியக் கூடிய பொருட்கள், செங்கல், கற்கள், பெட்ரோல் கேன்கள் அல்லது சோடா பாட்டில் ஆகியவை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. டிராக்டர்கள் டெல்லிக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதிகமாக சத்தம் ஏற்படுத்தக்கூடிய ஸ்பீக்கர்கள் பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் ஆரோரா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News