நேற்று வேட்பாளர், இன்று 6 முறை எம்.எல்.ஏ.-வாக இருந்தவர்: ம.பி.யில் பா.ஜனதாவில் இணைந்த காங்கிரஸ் தலைவர்கள்
- 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் நரேந்திர சிங் தோமரை எதிர்த்து போட்டி தோல்வியடைந்தார்.
- மீண்டும் மொரேனா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி கேட்ட நிலையில் காங்கிரஸ் மறுத்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த அக்சய் பாம் நேற்று திடீரென வேட்பு மனுவை திரும்பப் பெற்றதுடன் பா.ஜனதாவில் இணைந்தார்.
இந்த நிலையில் 6 முறை எம்.எல்.ஏ.-வாக இருந்த ராம்நிவாஸ் ராவத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார். இவர் சியோபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
1990, 1993, 2003, 2008, 2013-ல் விஜய்பூர் என்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
1998-ம் ஆண்டு பா.ஜனதாவின் பாபுலால் மெவ்ராவை எதிர்த்து போட்டியிட்டார். இதில் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2018-ல் பா.ஜனதா வேட்பாளர் சீதாராமை எதிர்த்து போட்டியிட்டு 2840 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் நரேந்திர சிங் தோமரை எதிர்த்து போட்டியிட்டார். 1,13,341 வாக்குகள் வித்தியாசத்தில் மொரேனா தொகுதியில் தோல்வியை சந்தித்தார். தற்போதைய தேர்தலிலும் மொரேனா தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார். ஆனால், காங்கிரஸ் சத்யபால் சிங் சிகர்வாருக்கு வாய்ப்பு வழங்கியது.