மத்தியப் பிரதேசத்தில் கனமழை- மீட்பு பணியில் ராணுவம்
- பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வடமேற்குப் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக இந்த 3 மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகங்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. செப்டம்பர் 11 ஆம் தேதி வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, இந்த மாநிலங்களில் சனிக்கிழமை வரை இடைவிடாத மழை பெய்யும்.
குவாலியர், மத்தியப் பிரதேசத்தில் கனமழையைத் தொடர்ந்து பார்வதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பிதர்வாரில் ராணுவம் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.