இந்தியா

பிரதமர் மோடியுடன் மத்திய பிரதேச முதல் மந்திரி சந்திப்பு

Published On 2023-12-22 09:23 GMT   |   Update On 2023-12-22 09:23 GMT
  • மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. 163 இடங்களில் வெற்றி பெற்றது.
  • மோகன் யாதவ் முதல் மந்திரியாக பதவியேற்றார்.

புதுடெல்லி:

மத்திய பிரதேசத்தில் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து வரும் பா.ஜ.க. சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியது. அங்கு மோகன் யாதவ் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். 54 வயதாகும் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும், பா.ஜ.க.விலும் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர்.

மேலும், துணை முதல் மந்திரிகளாக ராஜேந்திர சுக்லா மற்றும் ஜெக்தீஷ் தேதா ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். இதில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்ட மோகன் யாதவ் இன்று தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். அப்போது துணை முதல் மந்திரிகளும் உடனிருந்தனர். மேலும், உள்துறை மந்திரி அமித்ஷாவையும் முதல் மந்திரி மோகன் யாதவ் நேரில் சந்தித்தார்.

Tags:    

Similar News