மகாராஷ்டிர மாநில அரசியல் அசிங்கமானது: ராஜ் தாக்கரே கடும் விமர்சனம்
- ஒரே கட்சி ஆட்சியிலும் உள்ளது. எதிர்க்கட்சியாகவும் செயல்படுகிறது
- உலகத்தில் இதுபோன்று நான் பார்த்தது இல்லை
மகாராஷ்டிர மாநிலத்தின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே ஒரு நிகழ்ச்சில் கலந்து கொண்டபோது பேசியதாவது:-
மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரை, கட்சிகள் ஆட்சி அதிகாரத்திலும் உள்ளன. எதிர்க்கட்சியாகவும் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலை, நம்முடைய மாநிலத்தில் மட்டுமே உள்ளன. உலகில் வேறு எங்கேயும் இல்லை.
இந்த அபத்தமான, அசிங்கமான அரசியல் நிலையை நான் ஒருபோதும் பார்த்தது இல்லை. சிவசேனா கட்சியின் ஒரு கோஷ்டி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு கோஷ்டி ஆட்சி அதிகாரத்தில் உள்ளன. அந்த கட்சிகளின் மீதமுள்ளவர்கள் எதிர்க்கட்சிகளாக உள்ளனர்.
இவ்வாறு ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் சிவசேனா காட்சியில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே, அதிகமான எம்.எல்.ஏ.-க்களுடன் கட்சியை தன்வசமாக்கினார். கடந்த ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை உண்டாக்கி தனி கோஷ்டியாக செயல்பட்டு வரும் அஜித் பவார், 8 எம்.எல்.ஏ.-க்களுடன் ஆட்சியில் இணைந்துள்ளார்.