இந்தியா

போராட்டத்தால் பறிபோன 29 உயிர்கள்.. ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்த மம்தா பானர்ஜி

Published On 2024-09-13 14:54 GMT   |   Update On 2024-09-13 14:54 GMT
  • ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
  • நிவாரணம் வழங்குவதாக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டும், ஐந்து அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ஜூனியர் மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் 29 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், உயிரிழந்த 29 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், "ஜூனியர் மருத்துவர்களின் வேலைநிறுத்தம் காரணமாக சுகாதார சேவைகளில் ஏற்பட்ட இடையூறு காரணமாக விலைமதிப்பற்ற 29 உயிர்களை நாம் இழந்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், உயிரிழந்த ஒவ்வொருத்தரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News