இந்தியா

கொரோனா குறித்து தேவையற்ற பயத்தை பரப்ப வேண்டாம் - மத்திய மந்திரி அறிவுறுத்தல்

Published On 2023-04-07 11:01 GMT   |   Update On 2023-04-07 11:07 GMT
  • மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
  • கொரோனா தொற்று குறித்து தேவையற்ற பயத்தை பரப்ப வேண்டாம் என்றார்.

புதுடெல்லி:

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா இன்று 6 ஆயிரத்தை கடந்துள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அனைத்து மாநிலங்களிலும் சுகாதார வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தவேண்டும். கொரோனா மேலாண்மைக்கான அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்கவும், கொரோனா தொற்று குறித்து தேவையற்ற பயத்தை பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News