தேர்தல் அறிக்கை தயாரிக்க ப.சிதம்பரம் உள்பட 16 பேர் கொண்ட குழு: காங்கிரஸ் அறிவிப்பு
- கூட்டணி கட்சிகள் உடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மூத்த நிர்வாகிகள் 5 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டது.
- ப.சிதம்பரம் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறுகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
காங்கிரஸ் தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகிறது. கடந்த செவ்வாய்கிழமை அன்று 2024 மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகள் உடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மூத்த நிர்வாகிகள் 5 பேர் கொண்ட குழுவை அக்கட்சி அமைத்தது.
இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலுக்கான அறிக்கையை தயார் செய்வதற்காக ப.சிதம்பரம் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவில், சிங் தியோ, சித்தராமையா, பிரியங்கா காந்தி, சசிதரூர், ஜெய்ராம் ரமேஷ், ஆனந்த் ஷர்மா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
Congress President Shri @kharge has constituted the Manifesto Committee for the upcoming General Elections 2024 with immediate effect. pic.twitter.com/TD9Rf4bWiu
— Congress (@INCIndia) December 22, 2023