கூட்டு குடும்பத்தில் வசித்த 8 பேர் வெட்டிக்கொலை: கொலையாளி தூக்குப்போட்டு தற்கொலை
- சிந்துவாரா கலெக்டர் இன்று காலை கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
- கூட்டு குடும்பத்தில் 8 பேரை கொன்று விட்டு ஒருவர் தற்கொலை செய்து இருப்பது கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் சிந்துவாரா மாவட்டத்தில் போதல்கச்சார் என்ற கிராமத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரே வீட்டில் ஒரே சமையல் செய்து வாழ்ந்தனர்.
அந்த கூட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் பல்வேறு தொழில்களில் உள்ளனர். என்றாலும் அவர்களுக்கிடையே இதுவரை எந்தவித பிரச்சனையும் வந்தது இல்லை.
இந்த நிலையில் அந்த கூட்டு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் நேற்று இரவு கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டனர். அந்த கூட்டு குடும்பத்தை சேர்ந்த ஒருவரே இந்த கொலைகளை செய்து இருப்பது தெரியவந்தது.
அவர்களது வீட்டில் 8 பேர் உடல்களும் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் கிடந்தன. அவர்களை வெட்டி கொலை செய்தவர் வீட்டுக்குள்ளேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
எதற்காக அந்த நபர் தனது குடும்பத்தை சேர்ந்த 8 பேரை வெட்டிக்கொன்றார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து மகுல்கிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிந்துவாரா கலெக்டர் இன்று காலை அந்த கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கூட்டு குடும்பத்தில் 8 பேரை கொன்று விட்டு ஒருவர் தற்கொலை செய்து இருப்பது அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.