இந்தியா

புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்: ராகுல் காந்தி கண்டனம்

Published On 2024-03-06 16:27 GMT   |   Update On 2024-03-06 16:27 GMT
  • 2022ல் மட்டும் பெண்களுக்கு எதிராக 4.5 லட்சம் குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன
  • இது ஒரு தேசமாக நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டிய விஷயம். பெண்களுக்கான பாதுகாப்பும் மரியாதையும் வளர்ந்த தேசத்தின் அடையாளம்.

புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் ஏன் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன? என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

அதில், "2022ல் மட்டும் பெண்களுக்கு எதிராக 4.5 லட்சம் குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன, அதில் 31 ஆயிரம் பாலியல் வன்புணர்வு வழக்குகள் அடங்கும்.

உத்தரகாண்டில் பாதிக்கப்பட்ட அங்கிதா பண்டாரியின் குடும்பமாக இருந்தாலும் சரி, மத்தியப் பிரதேசத்தில் மனைவிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்காததால் குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவனாக இருந்தாலும் சரி, ஜார்கண்டில் கூட்டுப் பலாத்காரத்திற்கு ஆளான ஸ்பெயின் சுற்றுலா பயணியாக இருந்தாலும் சரி.

இதுபோன்ற ஒவ்வொரு சம்பவமும் ஒரு உணர்வற்ற அமைப்பு மற்றும் கொடூரமான சமூகத்தின் பிரதிபலிப்பாகும், இது ஒரு தேசமாக நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டிய விஷயம். பெண்களுக்கான பாதுகாப்பும் மரியாதையும் வளர்ந்த தேசத்தின் அடையாளம்" என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News