பாகிஸ்தானில் புதிய பயங்கரவாத பயிற்சி முகாமாகிய பின்லேடன் வாழ்ந்த இடம்- புலனாய்வில் அம்பலம்
- லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஸ்-இ-முகமது அமைப்புக்கு இந்தியா தடை.
- இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து புதிய பயங்கரவாத முகாமை அமைத்துள்ளதாக ரகசிய தகவல்.
இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருநாட்டு எல்லை வழியாக பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பங்கரவாதிகள் நுழைந்து தாக்குதலில் ஈடுபடுவதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்தியாவுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. நேற்றிரவு பாரமுல்லாவில் வாகனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இரண்டு வீரர்கள் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில்தான் பாகிஸ்தானில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த பின்லேடன் வகித்து வந்த அபோதாபாத்தில் பயங்கரவாத மையம் செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இந்திய அரசு லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஸ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புக்கு தடைவிதித்துள்ளது.
இந்த அமைப்புகள் இணைந்து அபோதாபாத்தில், பாகிஸ்தான் ராணுவம் கேம்பஸ் பகுதிக்குள் பயிற்சி முகாமை உருவாக்கியுள்ளதாக புலனாய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த முகாம் பக்கத்தில் பாகிஸ்தான் ராணுவ முகாமின் கதவு உள்ளதால், வெளியில் இருந்து பயங்கரவாத பயிற்சி மையத்தை ராணுவத்தின் அனுமதி இல்லாமல் எளிதில் அணுக முடியாது எனவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் புலானாய்வுத்துறையான ஐ.எஸ்.ஐ.-யின் அதிகாரி ஒருவர் அந்த முகாமின் மேற்பார்வையாளராக உள்ளார் என நம்பப்படுகிறது, இந்த முகாமில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கையாள்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தெரிகிறது.
அபோதாபாத்தில் பின்லேடன் பாதுகாப்பான ஒரு வீட்டை வளாகத்திற்குள் அமைத்து செயல்பட்டு வந்தார். அமெரிக்க ராணுவம் அவரை தேடிவந்த நிலையில், 2011-ம் ஆண்டு சுட்டுக்கொலை செய்தது. பாகிஸ்தான் அந்த இடத்தை 2012-ல் இடித்தது.
பயிற்சி முகாம் பின்லேடன் பாதுகாப்பாக வாழ்ந்து வந்த வீட்டின் இடிபாட்டிற்கு மேல் கட்டப்பட்டதா? எனத் தெளிவாக தெரியவில்லை. இந்த முகாம் ஹபீஸ் சயீத் (லஷ்கர்), சயத் சலாஹுதீன் (ஹிஸ்புல்), மசூத் அசார் (ஜெய்ஷ்) ஆகியோரால் மிகப்பெரிய அளவில் இயக்கப்பட்டு வருகிறது.
சயத் சலாஹுதீன்
இந்த மூன்று பேரும் இந்தியாவின் பயங்கரவாத தடுப்பு அமைப்பான என்.ஐ.ஏ.-வின் மிகவும் தேடுப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளனர்.
இந்த முகாமின் முக்கிய நோக்கம் மூன்று அமைக்களுக்கும் ஆட்களை சேர்ப்பதுதான். கடந்த சில தினங்களாக ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த முகாம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வரும் நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட பயங்கரவாத குழுவான தெரீக் லபைக் யா முஸ்லிம் பல்வேறு மாவட்டங்களில் தீவிர சோதகை்குப்பிறகு கலைக்கப்பட்டுள்ளது.