இந்தியா

எங்கள் அனுமதி இல்லாமல் குர்மீத் ராம் ரஹீம்-க்கு பரோல் வழங்கக் கூடாது: அரியானா அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Published On 2024-03-01 02:58 GMT   |   Update On 2024-03-01 02:58 GMT
  • 2017-ம் ஆண்டு இரண்டு பெண்களை கற்பழித்த வழக்கில் சிறைத்தண்டனை.
  • கடந்த ஜனவரி மாதம் மட்டும் 40 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

கற்பழிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவருக்கு அடிக்கடி பரோல் அனுமதி வழங்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 10 மாதங்களில் மட்டும் ஏழு முறை பரோலில் வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் 9 முறை வெளியில் வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் மட்டும் 40 நாட்கள் பரோலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு பஞ்சாப்- அரியானா நீதிமன்றத்தில் வந்தபோது, குர்மீத் ராம் ரஹீம்-க்கு பரோல் வழங்கப்பட்டது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அவர் மார்ச் 10-ந்தேதி சரண் அடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அடுத்த முறை அவருக்கு பரோல் வழங்க அரசு முடிவு செய்யும் என்றால், அதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் இந்த சலுகையை பெற்றுள்ளார். இதே குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் இந்த சலுகை பெற்றுள்ளார்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், எத்தனை பேர் இதே அடிப்படையில் பரோல் கேட்டு விண்ணப்பத்திருந்தனர். எத்தனை பேருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. இது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுளள்து.

ராம் ரஹீம்-க்கு மூன்று முறை 91 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நம்பவர் மாதம் 21 நாட்கள், ஜூலை மாதம் 30 நாட்கள், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 40 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தேரா சச்சா சவுதா அமைப்பின் முன்னாள் தலைவரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பரோல் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு பெண்களை கற்பழித்த குற்றச்சாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரியானாவின் பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News