இந்தியா

என் நண்பர் மீது தாக்குதல்.. வன்மையாக கண்டிக்கிறேன் - பிரதமர் மோடி

Published On 2024-07-14 03:11 GMT   |   Update On 2024-07-14 03:11 GMT
  • நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தார்.
  • அவர் விரைந்து குணமடைய விழைகிறேன்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "என் நண்பர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் வருத்தம் அடைகிறேன். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் மற்றும் ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைந்து குணமடைய விழைகிறேன். எங்களது எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனை இந்த சம்பவத்தில் காயமுற்றோர், உயிரிழந்தோர் குடும்பங்கள் மீது உள்ளது," என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அதிபர் தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள டொனால்டு டிரம்ப் பென்சில்வேனியாவில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தார்.

துப்பாக்கி சூட்டை தொடர்ந்து அதிபர் டிரம்ப் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் களத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Tags:    

Similar News