இந்தியா

பிரபல உலக தலைவர்கள் பட்டியல்: பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்

Published On 2024-02-23 12:58 GMT   |   Update On 2024-02-23 12:58 GMT
  • உலகின் பிரபல தலைவர்களில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
  • ஏற்கனவே நடத்திய கருத்துக் கணிப்புகளிலும் பிரதமர் மோடி முதலிடம் பிடித்திருந்தார்.

புதுடெல்லி:

உலகளவில் புகழ்பெற்ற தலைவர்கள் குறித்த கருத்துக் கணிப்பை மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்நிலையில், மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை கடந்த ஜனவரி 30-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை ஒரு வார காலம் நடத்தியது.

இதில் இந்திய பிரதமர் மோடிக்கு 78 சதவீதம் பேர் ஆதரவு அளித்திருந்தனர். மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபசுக்கு 65 சதவீதம் பேர் ஆதரவளித்ததால் 2-ம் இடம் பிடித்தார்.

அர்ஜென்டினா அதிபர் ஜாவிர் மிலே 63 சதவீதம் பேர் 3-ம் இடத்திலும், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் 52 சதவீதத்துடன் 4-ம் இடத்திலும், சுவிட்சர்லாந்தின் வையோலா அம்ஜெர்ட் 51 சதவீதத்துடன் 5-ம் இடத்திலும் உள்ளார்.

பிரேசில் அதிபர் டி சில்வா 6-ம் இடத்திலும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனேசி 7-ம் இடத்திலும், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி 8-ம் இடத்திலும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 9-ம் இடத்திலும், பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரு 10-ம் இடத்திலும் உள்ளார்.

Tags:    

Similar News