இந்தியா (National)

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷியாவுக்கு மீண்டும் பயணம்

Published On 2024-10-18 14:54 GMT   |   Update On 2024-10-18 14:54 GMT
  • 16 வது பிரிக்ஸ் [BRICS] உச்சி மாநாடு நடைபெற உள்ளது
  • BRICS கூட்டமைப்பு என்பது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய ஒரு அமைப்பாகும்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து கடந்த ஜூலை 9 ஆம் தேதி நடந்த 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி கடைசியாக ரஷியா சென்றிருந்தார். இதில் உக்ரைன் போர் குறித்து அதிபர் புதினுடன் விரிவாக உரையாடல் நடத்தினார்.

இந்த நிகழ்வின்போது மோடிக்கு ரஷியாவின் உயரிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் 22-23 ஆகிய தேதிகளில் ரஷியாவின் காசான் [Kazan] இல் வைத்து நடக்க உள்ள 16 வது பிரிக்ஸ் [BRICS] உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

BRICS கூட்டமைப்பு என்பது 2009 ஆம் ஆண்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய ஒரு அமைப்பாகும். இதில் 2010 இல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது. இந்த 5 நாடுகளில் பெயரில் உள்ள முதல் எழுத்தின் சுருக்கமே BRICS.கடந்த ஜனவரி 2024 இல் எகிப்து, எத்தியோப்பியா, இரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தற்போது நடக்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள ரஷியா பயணிக்கும் மோடி, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது. மேலும் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Tags:    

Similar News