இந்தியா

பிரதமர் இருக்கைக்கான ஏலத்தில் மும்முரம்: இந்தியா கூட்டணியை விளாசும் பிரதமர் மோடி

Published On 2024-04-24 14:18 GMT   |   Update On 2024-04-24 14:18 GMT
  • இந்தியா கூட்டணியில் "ஒரு வருடம் ஒரு பிரதமர் (One Year One PM)" பார்முலாவை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை.
  • ஒரு வருடம் ஒரு பிரதமர் என்பதை உலகம் கேலி செய்யும்.

பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் பீட்டலில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா கூட்டணியில் "ஒரு வருடம் ஒரு பிரதமர் (One Year One PM)" பார்முலாவை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக சில மீடியாக்கள் தெரிவிக்கின்றன. இதன் அர்த்தம் முதல் வருடம் முதல் பிரதமர், 2-வது வருடம் 2-வது பிரதமர், 3-வது வருடம் 3-வது பிரதமர், 4-வது வருடம் 4-வது பிரதமர், ஐந்தாவது வருடம் ஐந்தாவது பிரதமர். அவர்கள் பிரதமர் இருக்கைக்கான ஏலத்தில் மும்முரமாக உள்ளனர்.

ஒரு வருடம் ஒரு பிரதமர் என்பதை உலகம் கேலி செய்யும். ஒவ்வொரு வருடத்திற்கும் புதிய பிரதமரை என்பதை நீங்கள் விரும்புகிறீர்களா?

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது, அவர்கள் முதலில் ஆந்திர மாநிலத்தில் மதம் அடிப்படையிலான ஒதுக்கீட்டை அறிமுகம் செய்தார்கள். அந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சியால் வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. காங்கிரஸ் இன்னும் அந்த விளையாட்டை விளையாட விரும்புகிறது. ஓபிசி-யினர் பெற்று வந்த இடஒதுக்கீட்டை பங்கை காங்கிரஸ் பறித்துள்ளது. ஓபிசி இடஒதுக்கீடு மூலம் ஓபிசியினர் கர்நாடகாவில் பெற்று வந்துள்ள நிலையில், ஓபிசியில் முஸ்லிம்களை சேர்த்துள்ளது. காங்கிரசின் இந்த செயல் ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள ஓபிசி சமுதாயத்திற்கான எச்சரிக்கை மணி.

இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Tags:    

Similar News