இந்தியா

இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி

Published On 2024-08-28 06:47 GMT   |   Update On 2024-08-28 06:47 GMT
  • பயண தேதி இன்னும் இறுதியாகவில்லை.
  • இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக விரைவில் சிங்கப்பூருக்கு செல்ல உள்ளார். இந்தியா-சிங்கப்பூா் அமைச்சா்கள் அளவிலான உயர்மட்ட சந்திப்பு கூட்டம் சிங்கப்பூரில் நடந்தது.

இதில், இந்திய தரப்பில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வா்த்தகம்-தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல், ரெயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோா் கொண்ட குழு பங்கேற்றது.

இக்கூட்டம் முடிந்தபிறகு சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன் கூறும் போது, `அமைச்சா்களின் கூட்டம் ஆக்கபூா்வமானதாக இருந்தது. மேலும் பிரதமா் மோடியின் சிங்கப்பூா் பயணத்துக்கு களமாகவும் அமைந்தது. பிரதமர் மோடி விரைவில் சிங்கப்பூருக்கு வர உள்ளார். அவரது பயண தேதி இன்னும் இறுதியாகவில்லை.

மேம்பட்ட உற்பத்தி, செமி-கண்டக்டா்கள், விமானப் போக்குவரத்து, கடல்வழி இணைப்பு ஆகிய புதிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றியும் விவாதங்களைத் தொடங்கியுள்ளோம்.

சுமாா் 140 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு நாடு இப்போது அதன் விமானப் போக்குவரத்து துறையில் ஒரு பெரிய மேம்படுத்தலைத் தொடங்கியுள்ளது. இச்சூழலில் இந்தியாவுடன் நாங்கள் ஒத்துழைப்பில் இருப்பது மிகவும் சிறந்தது' என்றார்.

பிரதமர் மோடி யின் சிங்கப்பூர் பயணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. அவரது பயணத்தில் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News