எதிர்க்கட்சிகள் மக்களின் குரலை எதிரொலிக்கும்- ராகுல் காந்தி
- ஓம் பிர்லாவுக்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
- இந்திய அரசியலமைப்பை காக்கும் உங்கள் கடமையைச் செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து ராகுல் காந்தி கூறுகையில்,
* எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதன் மூலம், இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்த எங்களை அனுமதிப்பதன் மூலம், இந்திய அரசியலமைப்பை காக்கும் உங்கள் கடமையைச் செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
* எதிர்க்கட்சிகள் மக்களின் குரலை எதிரொலிக்கும். உங்களையும் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
#WATCH | Leader of Opposition, Rahul Gandhi says "We are confident that by allowing the Opposition to speak, by allowing us to represent the people of India, you will do your duty of defending the Constitution of India. I'd like to once again congratulate you and also all the… pic.twitter.com/HU9BYyS7xm
— ANI (@ANI) June 26, 2024