இந்தியா

சில்லரை பணவீக்கம் 4.75 சதவீதமாக குறைவு

Published On 2024-06-12 12:48 GMT   |   Update On 2024-06-12 12:48 GMT
  • இந்தியாவின் சில்லரை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதம் 4.83 சதவீதமாக இருந்தது.
  • கிராமப்புறங்களில் 5.28 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 4.15 சதவீதமாகவும் பணவீக்கம் உள்ளது.

இந்தியாவின் சில்லரை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதம் 4.83 சதவீதமாக இருந்தது. இது மே மாதத்தில் 4.75 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய அரசின் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில் 5.28 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 4.15 சதவீதமாகவும் சில்லரை பணவீக்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை வளர்ச்சி 2023 ஏப்ரலில் 4.6 சதவீதமாக இருந்தது. தற்போது ஏப்ரல் 2024-ல் 5 சதவீதமாக உயர்ந்தள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சுரங்கம் தொடர்பான உற்படத்தில் 6.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி 10.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News