இந்தியா

செந்தில் பாலாஜி வழக்கு- அமலாக்கத்துறையிடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

Published On 2024-07-24 10:45 GMT   |   Update On 2024-07-24 10:46 GMT
  • நாங்கள் எழுப்பிய கேள்விக்கு முதலில் பதில் அளிக்க வேண்டும் என அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
  • இதுபோன்ற கேள்வி அமலாக்கத்துறைக்கு எதிரானதாக எடுத்துக் கொள்ள கூடாது.

பண மோசடி வழக்கில் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, செந்தில் பாலஜிக்கு சொந்தமான இடத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்படாத சீகேட் ஹார்ட் டிஸ்க் அமலாக்கத் துறைக்கு எப்படி கிடைத்தது என்றும் எளிமையான கேள்விக்கு, எளிமையான பதில் தேவை என்றும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், சோதனையில் கைப்பற்றிய பென் டிரைவில் சர்ச்சைக்குரிய கோப்பு இருந்ததா ? எனவும், கைப்பற்றிய பென் டிரைவில் சர்ச்சைக்குரிய கோப்பு இல்லை என்பதே செந்தில் பாலாஜி தரப்பின் வாதமாக உள்ளதே எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நாங்கள் எழுப்பிய கேள்விக்கு முதலில் பதில் அளிக்க வேண்டும் என அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுபோன்ற கேள்வி அமலாக்கத்துறைக்கு எதிரானதாக எடுத்துக் கொள்ள கூடாது. 15 நிமிடங்களாக உரிய பதில் இல்லையே எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அப்போது, சோதனையில் கைப்பற்றாத சீகேட் ஹார்ட் டிஸ்க்கை ஏற்கனவே தமிழ்நாடு லஞ்சம் ஓழிப்புத்துறை வசம் இருந்ததாக அமலாக்கத்துறை வாதம் செய்தது.

கடந்த 2020, பிப்ரவரி 2ம் தேதி சோதனையிட்டபோது, இந்த விவகாரத்தை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் செந்தில் பாலாஜி எழுப்பவில்லை எனவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

இதற்கிடையே, செந்தில் பாலாஜி ஏற்கனவே ஓராண்டுக்கு மேல் சிறையில் உள்ளார். இன்னும் எத்தனை நாட்கள் சிறையில் கிழப்பது ? என செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கூறினார்.

இந்நிலையில், நாளை உரிய பதிலுடன் வர அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியதை தொடர்ந்து, வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News