இந்தியா

ஷேக் ஹசீனா எவ்வளவு காலம் இந்தியாவில் இருப்பார்? வெளியான புது தகவல்

Published On 2024-08-06 03:09 GMT   |   Update On 2024-08-06 03:09 GMT
  • ராணுவ விமானம், டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
  • டெல்லியில் உள்ள தனது மகள் சைமா வாசேத்தை சந்தித்ததாக தெரிகிறது.

வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற இந்தியாவின் உதவியை நாடினார். எனவே அவருக்கு மத்திய அரசு உதவ முன்வந்தது.

அதன்படி ஷேக் ஹசீனாவுடன் டாக்காவில் இருந்து கிளம்பிய ராணுவ விமானம், டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

பின்னர் அவர் டெல்லியில் உள்ள தனது மகள் சைமா வாசேத்தை சந்தித்ததாக தெரிகிறது. அவர் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குனராக உள்ளார்.

இதனிடையே, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசினாவுக்க தற்காலிகமாக இங்கு தங்கும் அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஷேக் ஹசீனா பிரிட்டனுக்கு இடம்பெயர்வதற்கான அனுமதி நிலுவையில் உள்ளதால், அவர் தற்காலிகமாக இந்தியாவில் தங்க வைக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News