சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல 2 இந்திய வீரர்கள் தேர்வு- இஸ்ரோ அறிவிப்பு
- சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல 4-வது திட்டத்திற்காக இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- இதில் கிடைக்கும் அனுபவம், இந்தியாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
பெங்களூரு:
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மனித விண்வெளி விமான மையமும், அமெரிக்காவின் ஆக்சிம் விண்வெளி நிறுவனமும் விண்வெளி விமான ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. இந்தியா-அமெரிக்கா மிஷன் திட்டத்தன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல 4-வது திட்டத்திற்காக இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக இந்தியாவின் தேசிய திட்ட நிர்ணய வாரியம், 2 விண்வெளி வீரர்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. அதாவது விண்வெளி வீரர்கள் குழு கேப்டன் சுபான்சு சுக்லா (முதன்மை) மற்றும் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கான பயிற்சி இந்த வாரத்தில் தொடங்கும். இதில் கிடைக்கும் அனுபவம், இந்தியாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
விண்வெளி வீரர்கள் சுபான்சு சுக்லா, பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோர் இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் வீரர்களாக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.