இந்தியா

கோவில் உண்டியலில் ரூ.100 கோடிக்கு காசோலை செலுத்திய பக்தர் - அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்

Published On 2023-08-24 21:33 GMT   |   Update On 2023-08-24 21:33 GMT
  • விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் அப்பண்ணா வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்.
  • இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வாடிக்கை.

அமராவதி:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது.

இந்நிலையில், கோவில் அதிகாரிகள் சார்பில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நேற்று நடந்தது. அப்போது உண்டியலில் இருந்த காசோலை ஒன்றை எடுத்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அந்தக் காசோலையில், 100 கோடி ரூபாய்க்கு கோவில் பெயரில் காணிக்கையாக எழுதப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதில், பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு காசோலை என தெரிய வந்தது. காசோலை எம்விபி டபுள் ரோடு கோடக் வங்கி கிளையின் பெயரில் இருந்தது. அதிலும் வராகலட்சுமி நரசிம்ம தேவஸ்தானம் என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலையில் முதலில் ரூ10 என்றும், பிறகு அதை அடித்து 100 கோடி எனவும் எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் வங்கிக்குச் சென்று அந்த சேமிப்பு கணக்கு குறித்த தகவல்களை விசாரித்தனர். அந்த சேமிப்பு கணக்கில் 17 ரூபாய் மட்டும் இருப்பு இருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து, காசோலையை காணிக்கையாக போட்டவரைக் கண்டுபிடித்து, இனி இதுபோன்ற செயலில் ஈடுபடாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க கோவில் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கோவில் உண்டியலில் 100 கோடி ரூபாய்க்கு காசோலை போட்ட நபரின் செயல் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அடைந்தனர்.

Tags:    

Similar News