இந்தியா (National)

1 வருஷம் கூட ஆகல.. மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை பலத்த காற்றால் அடியோடு சாய்ந்தது.. வீடியோ

Published On 2024-08-26 12:45 GMT   |   Update On 2024-08-26 12:45 GMT
  • சத்ரபதி சிவாஜியின் சிலை பலத்து காற்று வீசியதில் முழுமையாக சேதம் அடைந்தது.
  • தேசிய கடற்படை தினத்தை ஒட்டி பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜி சிலை திறந்து வைக்கப்பட்டது.

மஹாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு திறந்து வைத்தார். இந்த நிலையில், 35 உயரமுள்ள சத்ரபதி சிவாஜியின் சிலை பலத்து காற்று வீசியதில் முழுமையாக சேதம் அடைந்து கீழே விழுந்தது.

கடந்த மூன்று நாட்களாக சிந்துதுர்க்கில் கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசி வரும் நிலையில், இன்று மதியம் 1 மணி அளவில் 35 அடி உயரமுள்ள சிலை முழுமையாக உடைந்து தலை, கை, கால்கள் என ஒவ்வொரு பாகமும் தரையில் வீழுந்தது.

 


சத்ரபதி சிவாஜி சிலை சேதமுற்று கீழே விழுந்த நிலையில், கள சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக காவல் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாக குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சேதம் பற்றிய ஆய்வுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.



கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி தேசிய கடற்படை தினத்தை ஒட்டி பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜியின் சிலையை திறந்து வைத்தார். மேலும், அங்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டிருந்தார்.


Tags:    

Similar News