இந்தியா

நீதிபதி திட்டியதால் ரெயில்வே டிராக்கில் அமர்ந்து தற்கொலைக்கு முயன்ற சப் இன்ஸ்பெக்டர் - வீடியோ

Published On 2024-09-17 12:21 GMT   |   Update On 2024-09-17 12:21 GMT
  • நீதிபதி அபிஷேக் திரிபாதி தன்னை தொடர்ச்சியாக அவரது அறைக்கு அழைத்து திட்டியும் மிரட்டியும் வந்தார்
  • ரெயில்வே டிராக்கில் அழுதுகொண்டே அமர்ந்திருந்ததும் அவரை சக போலீசார் சென்று சமாதானப்படுத்தி அங்கிருந்து மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் நீதிபதி திட்டியதால் காவல் துணை ஆணையர் [சப் இன்ஸ்பெக்டர்] ரெயில்வே டிராக்கில் அமர்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில், உ.பி அலிகார் பகுதி காவல் துணை ஆணையர் ரெயில்வே டிராக்கில் அழுதுகொண்டே அமர்ந்திருந்ததும் அவரை சக போலீசார் சென்று சமாதானப்படுத்தி அங்கிருந்து மீட்டதும் பதிவாகியுள்ளது.

மேலும் நீதிபதி அபிஷேக் திரிபாதி தன்னை தொடர்ச்சியாக அவரது அறைக்கு அழைத்து திட்டியும் மிரட்டியும் வந்தார் என்று சக போலீசிடம் அந்த சப் இன்ஸ்பெக்டர் கூறி அழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

அந்த சப் இன்ஸ்பெக்டரின் பெயர் சச்சின் குமார் என்பதும் சமீபத்தில் பைக் திருட்டு தொடர்பாக அவர் 5 பேரை கைது செய்ததற்கு ஏன் அப்பாவிகளைக் கைது செய்தாய் என கூறி நீதிபதி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்ய முடிவெடுத்து ரெயில்வே டிராக்கில் சென்று அமர்ந்துள்ளார்.

Tags:    

Similar News