இந்தியா

திரவுபதி முர்முவுக்கு ஆதரவு: குமாரசாமி சூசக தகவல்

Published On 2022-06-30 02:55 GMT   |   Update On 2022-06-30 02:55 GMT
  • ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு அதிகளவில் ஆதரவு கிடைத்துள்ளது.
  • பழங்குடியின பெண் இவ்வளவு பெரிய உயரத்தை அடைவது மற்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

பெங்களூரு:

ஜனாதிபதி பதவிக்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த்சின்கா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். பா.ஜனதா வேட்பாளருக்கு பா.ஜனதாவின் கூட்டணி கட்சிகள் மற்றும் கூட்டணியில் இல்லாத கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு வழங்குவதாக ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி சூசகமாக கூறியுள்ளார். இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு அதிகளவில் ஆதரவு கிடைத்துள்ளது. அதனால் எங்கள் கட்சியின் ஆதரவு அக்கட்சிக்கு தேவை இல்லை. ஆயினும் பா.ஜனதா எங்களிடம் ஆதரவு கேட்டுள்ளது. திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாகவே நான் கருதுகிறேன். அவர் தேவேகவுடாவை 2 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆதரவு வழங்குமாறு கேட்டார்.

பெங்களூருவுக்கு நேரில் வந்து ஆதரவு கேட்பதாகவும் கூறினார். ஆனால் நேரில் ஆதரவு கேட்க தேவை இல்லை. அவர் அடிமட்டத்தில் இருந்து எப்படி வளர்ந்து மேல்நிலைக்கு வந்துள்ளார் என்பதை நான் அறிவேன். பழங்குடியின பெண் இவ்வளவு பெரிய உயரத்தை அடைவது மற்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Tags:    

Similar News