இந்தியா

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கில் ஆகஸ்ட் 2-ல் இருந்து விசாரணை- உச்சநீதிமன்றம்

Published On 2023-07-11 06:12 GMT   |   Update On 2023-07-11 10:57 GMT
  • ஆவணங்களை ஜூலை 17-க்குள் சமர்பிக்க உத்தரவு
  • இரண்டு பேரை மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க அனுமதி

மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை ரத்து செய்தது. அதோடு இரண்டு மாநிலமாக பிரிக்கப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், ஐந்து நீதிபகள் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக இது தொடர்பான வழக்கு பட்டியலிடாமல் இருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று பட்டியலிடப்பட்டது. அப்போது, இந்த வழக்கு தொடர்பான விவரங்களை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் அறிவித்தது.

அப்போது ஜூலை 27-ந்தேதிக்குள் அரசியலமைப்பு பிரிவு 370 ரத்து தொடர்பான ஆவணங்கள், எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 2-ந்தேதியில் இருந்து விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், ஆர்வலர் ரஷித் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா பைசல் ஆகியோர் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்கு இந்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Tags:    

Similar News