இந்தியா

உ.பியில் பரோலில் வெளியே வந்து மீண்டும் சிறை திரும்பாத 16 கைதிகளுக்கு போலீஸ் வலை

Published On 2022-07-12 10:19 GMT   |   Update On 2022-07-12 11:11 GMT
  • பரோலில் சென்ற கைதிகளை கைது செய்யும்படி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
  • 23 பேர் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திரும்பி வந்துள்ளனர்.

2021-ம் ஆண்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவியபோது, ​​உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹார்பூர் மாவட்டத்தில் உள்ள சிறையில் நெரிசலைக் குறைக்க உயர்மட்டக் குழுவின் உத்தரவின் பேரில் சிறிய குற்றங்களுக்காக அடைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் வயதான கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பரோலில் சென்ற 16 கைதிகள் திரும்ப சிறைக்கு வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால், பரோலில் சென்ற கைதிகளை கைது செய்யும்படி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளர் மிஜாஜி லால் கூறியதாவது:-

சிறையில் கைதிகள் 39 பேர் பரோலில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் கடந்த மே மாதம் திரும்பி இருக்க வேண்டும். இதில் 23 பேர் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திரும்பி வந்துள்ளனர். இருப்பினும் 16 கைதிகள் இன்னும் சிறை திரும்பவில்லை. அவர்களது குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டுள்ளோம். ஆனாலும் இன்னும் சிறை திரும்பவில்லை. அதனால், 16 பேரையும் கைது செய்ய காவல் நிலையங்களுக்கும் காவல் கண்காணப்பாள்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News