இந்தியா

ஜி20 உச்சி மாநாடு - டெல்லியில் மூன்று நாட்களுக்கு 207 ரெயில் சேவைகள் ரத்து

Published On 2023-09-02 16:09 GMT   |   Update On 2023-09-02 16:09 GMT
  • டெல்லியில் ஜி20 மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.
  • ஜி20 மாநாடு நடைபெறுவதால் டெல்லி முழுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

ஜி20 உச்சி மாநாடு அடுத்த வாரம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. பல நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு தலைவர்கள் பலர் இதில் கலந்து கொள்கிறார்கள். ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருப்பதை ஒட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாடு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதால் பொது மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உச்சி மாநாடு நடைபெறுவதால், தலைவர்கள் பாதுகாப்பு காரணமாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தலாம், பொதுமக்கள் காரணத்தை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டி செப்டம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய மூன்று நாட்களுக்கு ரெயில் சேவைகள் பாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த மூன்று நாட்களுக்கு 207 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுதவிர 36 ரெயில் சேவைகள் குறுகிய காலத்திற்கு இயக்கப்படும் என்று தெரிகிறது. 

Tags:    

Similar News